நெல்லையில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
நெல்லையில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை:
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நெருக்கடி மிகுந்த பகுதிகளிலும், ஆட்கள் நுழைய முடியாத இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பொருட்டு அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட குட்டி டிரோன்கள் பயன்படுத்தப்பட்டது. பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய இந்த வகை டிரோன் 16 லிட்டர் கிருமிநாசினியை சுமந்தபடி பறக்கும் திறன் கொண்டது.
இந்த நிலையில் தற்போது நெல்லை மாநகரத்திலும் குட்டி டிரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுபடி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி, உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் ஆகியோர் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில், நவீன டிேரான் மூலமாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் காந்திமதி அம்மாள் பள்ளி கொரோனா சிறப்பு மையம் மற்றும் பாளையங்கோட்டை மார்க்கெட், சிவன் கோவில், கே.டி.சி.நகர், ரஹ்மத் நகர், சாந்தி நகர் ஆகிய பகுதிகளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் மேற்பார்வையாளர் முருகன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கனகப்ரியா, சீதா லட்சுமி, எல்.சி.எப். அருள் செல்வன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story