சிவகாசி பஜார் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
“தினத்தந்தி” செய்தி எதிரொலி காரணமாக சிவகாசி பஜார் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் ஆய்வு செய்தார்.
சிவகாசி,
“தினத்தந்தி” செய்தி எதிரொலி காரணமாக சிவகாசி பஜார் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் ஆய்வு செய்தார்.
கொரோனா
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சில கட்டுப்பாடுகளுடன் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் மற்றும் ஓட்டல்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் கூட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவகாசியில் ரதவீதிகள் மற்றும் சிவன் கோவில் அருகில் அதிக அளவில் தள்ளுவண்டிகளிலும், சாலையின் இருபுறங்களிலும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
இதை வாங்க சமூக இடைவெளியை மறந்து மக்கள் கூடினர். இதுகுறித்த படம் தினத்தந்தியில் வெளியானது. இதை தொடாந்து நேற்று அதிகாலை முதலே நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் பொதுமக்களை ஒரே இடத்தில் குவிய அனுமதி மறுத்தனர். ஒரே இடத்தில் இருந்த பழக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க உத்தரவிட்டனர்.
திடீர் ஆய்வு
இந்தநிலையில் விருதுநகரில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் காலை 12 மணி அளவில் சிவகாசிக்கு திடீர் பயணமாக வந்தார்.
பின்னர் சிவகாசியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். நகரின் மையப்பகுதியான சிவன்கோவில் அருகில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் பொதுமக்களை அதிகளவில் ஒரே இடத்தில் கூட எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதை தொடர்ந்து சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல் ராஜ்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி ஆகியோர் அதற்கான நடவடிக்கையை எடுத்தனர். போலீசாரின் கடுமை யான நடவடிக்கைக்கு பின்னர் நேற்று மதியம் 1 மணிக்கு பின் னர் சிவகாசியில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமாக இருசக்கர வாகனங்களில் சுற்றும் வாலிபர்கள் கூட நேற்று வெளியே சுற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story