புஞ்சைபுளியம்பட்டி, கொடுமுடி, நம்பியூர் பகுதியில் 44 பேருக்கு கொரோனா
புஞ்சைபுளியம்பட்டி, கொடுமுடி, நம்பியூர் பகுதியில் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி, கொடுமுடி, நம்பியூர் பகுதியில் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மருத்துவ பரிசோதனை முகாம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாகி வருகிறது. இதனால் மாவட்டத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 1,000-ஐ நெருங்கி உள்ளது.
இதுஒருபுறம் இருக்க கொரோனா மருத்துவ பரிசோதனை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டியில் செங்குந்தபுரம், தங்கசாலை வீதி, ஜெ.ஜெ.நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் மேற்கொள்ளப்பட்டது.
26 பேர்
இந்த பரிசோதனையின் முடிவில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது நேற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 26 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொடுமுடி
இதேபோல் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கொடுமுடியை சேர்ந்த 55 வயது பெண், கொடுமுடி சிவசக்தி நகரை சேர்ந்த 55 வயது மற்றும் 71 வயது பெண், வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்த 32 வயது பெண், கொடுமுடி காங்கேயம் சாலையை சேர்ந்த 43 வயது பெண், இச்சிப்பாளையத்தை சேர்ந்த 38 வயது பெண், தாமரப்பாளையத்தை சேர்ந்த 53 வயது பெண் மற்றும் 71 வயது ஆண் உள்பட மொத்தம் 15 பேருக்கு ெகாரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் 15 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நம்பியூர்
நம்பியூர் பேரூராட்சி பகுதியான ராஜீவ் காந்தி நகர், காந்திபுரம் மேடு, கடத்தூர், ஆண்டிபாளையம், கூடக்கரை, கெட்டிசெவியூர் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் நம்பியூர் ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண், கோசனம் ஊராட்சி ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஆண், கூடக்கரை பட்டறை வீதியை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஆகிய 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி, கொடுமுடி, நம்பியூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story