கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வழங்கப்படும் கலெக்டர் ராமன் உறுதி


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வழங்கப்படும் கலெக்டர் ராமன் உறுதி
x
தினத்தந்தி 15 May 2021 2:15 AM IST (Updated: 15 May 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வழங்கப்படும் என்று கலெக்டர் ராமன் உறுதியளித்தார்.

சேலம்:
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வழங்கப்படும் என்று கலெக்டர் ராமன் உறுதியளித்தார்.
தனியார் ஆஸ்பத்திரிகள்
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள 6 அரசு ஆஸ்பத்திரிகள், 43 தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இவர்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் படுக்கையுடன் கூடிய சிகிச்சை வசதி ஆஸ்பத்திரிகளில் கிடைப்பதில்லை. இதனால் சிலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்த ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படாவிட்டால் கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்து இந்திய மருத்துவ சங்கத்தின் சேலம் கிளை சார்பில் அறிவிக்கப்பட்டது.
தேவையான அளவு வழங்கப்படும்
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ராமனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் உறுதியளித்தார்.
இதனை வரவேற்று இந்திய மருத்துவ சங்கத்தின் சேலம் கிளை நிர்வாகிகள் கலெக்டருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் துரிதமாக நடவடிக்கை எடுத்து உதவிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கலெக்டர் ராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Next Story