சேலத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இறைச்சி கடைகளில் விற்பனை மும்முரம்


சேலத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இறைச்சி கடைகளில் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 15 May 2021 2:16 AM IST (Updated: 15 May 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையையொட்டி சேலத்தில் இறைச்சி கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்தது.

சேலம்:
ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் இறைச்சிகளை எடுத்து சமைத்து சாப்பிடுவார்கள். குறிப்பாக அன்றைய தினம் பிரியாணி சமைத்து உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி சேலம் செவ்வாய்பேட்டை, கிச்சிபாளையம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, குகை உள்ளிட்ட பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் நேற்று காலை ஆட்டிறைச்சி மற்றும் பிராய்லர் கோழிகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதனால் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700-க்கும், ஒரு கிலோ பிராய்லர் கோழி இறைச்சி ரூ.170 முதல் 200 வரைக்கும் விற்கப்பட்டது. பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் நேற்று அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் இறைச்சி விற்பனை களை கட்டியிருந்தது. ஏராளமான முஸ்லிம்கள் இறைச்சி கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான இறைச்சி வகைகளை வாங்கி சென்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 நாட்களாக இறைச்சி மற்றும் மீன் கடைகளில் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி இறைச்சி விற்பனை மும்முரமாக நடை பெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Next Story