அ.தி.மு.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல்- 4 பேர் மீது வழக்கு


அ.தி.மு.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல்- 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 May 2021 2:16 AM IST (Updated: 15 May 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே சம்சிகாபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 44). அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளரான இவர், சங்கரன்கோவிலைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி தனலட்சுமியிடம் இரு ஏலச்சீட்டுகளுக்காக ரூ.9 லட்சம் செலுத்தியதாகவும், பின்னர் அந்த பணத்தை தனலட்சுமி திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து சுப்புலாபுரத்தில் உள்ள தனலட்சுமியின் தந்தையான விசைத்தறிக்கூட உரிமையாளர் ஜெகநாதனிடம் சென்று ரவிச்சந்திரன் பணத்தை கேட்டார். அப்போது ஜெகநாதன், அவருடைய மகள் தனலட்சுமி, மருமகன் கல்யாணசுந்தரம், விசைத்தறிக்கூடத்தில் பணியாற்றிய பாலசுப்பிரமணியன் ஆகிய 4 பேரும் சேர்ந்து ரவிச்சந்திரனை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஜெகநாதன் உள்பட 4 பேர் மீது கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story