தொழிலாளர்களுக்கு கொரோனா; தனியார் ஆலை மூடல்


தொழிலாளர்களுக்கு கொரோனா; தனியார் ஆலை மூடல்
x
தினத்தந்தி 15 May 2021 2:37 AM IST (Updated: 15 May 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து ஆலை மூடப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம்: 
விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் ஆலையில் சில அலுவலர்கள், தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த ஆலை மூடப்பட்டது. தொடர்ந்து அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆலை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மீண்டும் ஆலை திறக்கப்படும் என்று ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Next Story