சிறுமியின் உண்டியல் பணம்-ரூ.11 லட்சம் கொரோனா நிவாரண நிதி அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கப்பட்டது


சிறுமியின் உண்டியல் பணம்-ரூ.11 லட்சம் கொரோனா நிவாரண நிதி அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 15 May 2021 2:39 AM IST (Updated: 15 May 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பணிகளுக்காக, முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.11 லட்சம் நிதி மற்றும் சிறுமியின் உண்டியல் பணம் அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கப்பட்டது.

கொரோனா பணிகளுக்காக, முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.11 லட்சம் நிதி மற்றும் சிறுமியின் உண்டியல் பணம்  அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கப்பட்டது.
நிவாரண நிதி
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கவும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் பொதுமக்கள் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதி திட்டத்துக்கு  வழங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் நிதி வழங்கி வருகிறார்கள்.
உண்டியல் பணம்
இது சிறுவர், சிறுமிகளுக்கும் கொரோனா நிதி வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி பவானியை அடுத்து உள்ள காடச்சநல்லூர் ஐந்து பனை பகுதியை சேர்ந்த டி.லட்சுமி நாராயணி என்ற பெண் அவரது மகள் மேகாஸ்ரீ யுடன் வந்து அவரது சேமிப்பு உண்டியலை கொரோனா நிதியாக வழங்கினார். அவர் கூறும்போது, ‘முதல்-அமைச்சர் கொரோனா நிதி கேட்பது தொடர்பாக எங்கள் மகள் மேகாஸ்ரீ தொலைக்காட்சியில் பார்த்தார். உடனடியாக எங்கள் வீட்டில் நாங்கள் சேமித்து வரும் உண்டியலை நிதியாக வழங்கலாம் என்று கூறினார். எனக்கும், எனது கணவருக்கும் பெற்றோர் இல்லை. எனவே எங்களுக்கு மகள் மேகாஸ்ரீதான் எல்லாம். எனவே அவள் கூறியபடி உண்டியலை எடுத்து வந்து அவளது கையால் வழங்கி உள்ளோம்’ என்றார்.
இந்த உண்டியல் நிதியை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் சி.கதிரவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
ரூ.11 லட்சம்
இதுபோல், ஈரோடு தீபா மெடிக்கல் குழும நிறுவனங்களின் உரிமையாளர் முதல்- அமைச்சரின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.11 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியும், தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனருமான காகர்லா உஷா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story