1,450 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக 1,450 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக 1,450 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊரடங்கு விதிமீறல்
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
இருப்பினும் ஊரடங்கு உத்தரவு விதிமுறையை மீறி இரு சக்கர வாகனங்களில் ரோடுகளில் சுற்றித்திரிபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் போலீசார் அபராத நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அபராதம்
அதன்படி மாநகரப் பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் முககவசம் அணியாமல் வந்த 300 பேருக்கு தலா ரூ.200, சமூக இடைவெளியை கடைபிடிக்காத 15 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோல் புறநகர் பகுதிகளில் மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகள் 1,150 பேருக்கு முகக்கவசம் அணியாமல் வீதியில் சென்றதால் தலா ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 25 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. உடனடி அபராதம் வசூலித்து எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். மொத்தம் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story