ஊஞ்சலூர், அந்தியூர் பகுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
ஊஞ்சலூர், அந்தியூர் பகுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
,அந்தியூர், கெட்டிசமுத்திரம், ஜே.ஜே.நகர், கரட்டுப்பாளையம், பீடி தொழிலாளர் காலனி, குந்துபாயூர் உள்பட பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள். ஊரடங்கு காரணமாக ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தப்படவில்லை. இதனால் கடந்த 30 நாட்களாக நோன்பு இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏழைகளுக்கு பணம், உணவுப் பொருட்கள், புத்தாடைகள் வழங்கினார்கள். மேலும் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இதேபோல் ஊஞ்சலூர் அருகே காசிபாளையம், குள்ளக்கவுண்டன்புதூர், வள்ளியம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் அன்று மசூதியில் தொழுகை நடத்தி நோன்பு துறப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைவரும் புத்தாடை அணிந்து, குடும்பம் குடும்பமாக தங்கள் வீட்டிலேயே தொழுகை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story