மாவட்ட செய்திகள்

தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் தி.மு.க., எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு + "||" + Gummudipondi At the Government Hospital DMK, MLA Sudden study

தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் தி.மு.க., எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் தி.மு.க., எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு செய்தார்.
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லாத நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியை எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட சுகாதார பணிகளுக்கான இணை இயக்குனர் ராணி, தாசில்தார் மகேஷ், வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வின் போது கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன், தனியார் மின் உற்பத்தி தொழிற்சாலை வழங்கிய 8 ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரங்களை மாவட்ட சுகாதார பணிகளுக்கான இணை இயக்குனர் ராணியிடம் ஒப்படைத்தார்.

மேலும் எளாவூரில் உள்ள தனியார் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் இயங்கிவரும் கொரோனா சிகிச்சை மையத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து எளாவூரில் பயன்பாடின்றி கிடக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி கட்டிடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கும்மிடிப்பூண்டி அருகே வீடுகளில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மின் மீட்டர்கள் வெடித்து சிதறின
கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் வீடுகளுக்கு திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் 50-க்கும் மேற்பட்ட மின் மீட்டர்கள் வெடித்து தீ பிடித்து எரிந்தன.
2. கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி: தலைமறைவான தொழிற்சாலை நிர்வாகிகள் 2 பேருக்கு வலைவீச்சு
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பழைய டயர் உருக்கு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள தொழிற்சாலை நிர்வாகிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
3. கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது-கஞ்சா விற்ற 13 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 194 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4. கும்மிடிப்பூண்டி கொரோனா தடுப்பூசி முகாமில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
கும்மிடிப்பூண்டியில் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூடியதால் கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. மேலும் முன்பதிவிற்கான டோக்கன் தீர்ந்ததால் பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
5. ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் கொலை செய்யப்பட்டாரா ? ஊழியர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் கொலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.