5 மாநில தேர்தல் தோல்வி குறித்து மாநில தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை; ஆய்வு கமிட்டி தலைவர் அசோக் சவான் தகவல்


5 மாநில தேர்தல் தோல்வி குறித்து மாநில தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை; ஆய்வு கமிட்டி தலைவர் அசோக் சவான் தகவல்
x
தினத்தந்தி 15 May 2021 3:42 PM IST (Updated: 15 May 2021 3:42 PM IST)
t-max-icont-min-icon

5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய மாநில தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக அசோக் சவான் கூறியுள்ளார்.

ஆய்வு செய்ய கமிட்டி

சமீபத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மோசமாக இருந்தது. எனவே 5 மாநில சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய அந்த மாநில பொதுப்பணித்துறை மந்திரியுமான அசோக் சவான் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளார்.

இந்த கமிட்டி, தேர்தல் நடந்த மாநில தலைவர்களுடன் பேசி வருகிறது.

ஆலோசனை

இந்தநிலையில் இதுகுறித்து கமிட்டி தலைவர் அசோக் சவான் கூறியதாவது:-

நாங்கள் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர்கள், மாநில தலைவர்கள், மாநில அகில இந்திய பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம். மேலும் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள், வேட்பாளர்களிடமும் அடுத்த 2 நாளில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். நாங்கள் கட்சியின் செயல்பாடுகளை கணக்கிட உள்ளோம். இதில் அடுத்த கட்டத்துக்கு செல்ல சுயபரிசோதனை மற்றும் கருத்துகள் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story