ராமேசுவரம் வந்த சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை


ராமேசுவரம் வந்த சுற்றுலா பயணிகளுக்கு  போலீசார் எச்சரிக்கை
x

முழு ஊரடங்கு தடையை மீறி ராமேசுவரம் வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரிக்கை செய்து வேன் டிரைவருக்கு அபராதம் விதித்தனர்.

ராமேசுவரம், 
முழு ஊரடங்கு தடையை மீறி ராமேசுவரம் வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரிக்கை செய்து வேன் டிரைவருக்கு அபராதம் விதித்தனர்.
தடை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் எதிரொலியாக முழுஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதோடு, கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை அமலில் உள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதிக்கு நேற்று கமுதி அருகே உள்ள பெருநாழி பகுதியில் இருந்து வேன் ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் ராமேசுவரம் வருகை தந்தனர்.  அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து முடி காணிக்கை செலுத்திவிட்டு அதன் பின்னர் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்துள்ளனர்.தரிசனம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் தாங்கள் வந்த வேனிலேயே மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். 
அபராதம்
அப்போது பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கோவில் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த வேனை நிறுத்தினர். தடையை மீறி எந்த ஒரு முன் அனுமதியும் இல்லாமல் 10 பேருடன் வந்த வேன் ஓட்டுனருக்கு ரூ. 200 அபராதம் விதித்து அந்த வேனில் வந்த சுற்றுலா பயணிகளை எச்சரிக்கை செய்து அறிவுரை கூறி வேனை பறிமுதல் செய்யாமல் போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். 
ஊரடங்கு உத்தரவை மீறி ராமேசுவரம் பகுதியில் சுற்றித்திரிந்த பல இருசக்கர வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்தனர்.

Next Story