ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு


ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 15 May 2021 9:17 PM IST (Updated: 15 May 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

கீழக்கரையில் கடந்த 20 நாட்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா அறிகுறி இருந்தால் உடனே சிகிச்சை பெற சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது

கீழக்கரை, 
கீழக்கரையில் கடந்த 20 நாட்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா அறிகுறி இருந்தால் உடனே சிகிச்சை பெற சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
காய்ச்சல்,இருமல்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவுவதால் உயிர் பலி அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கீழக்கரையில் கொரோனா 2-வது அலையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்த நிலையில் சிலர் காய்ச்சல், இருமல், சளி போன்ற தொந்தரவு இருக்கும்  பட்சத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல் அச்சப்பட்டு வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிலர் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. கீழக்கரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கடந்த 20 நாட்களில் உயிரிழந்தது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இது குறித்து சுகாதாரத்துறை மருத்துவர் ராசிக்தீன் கூறுகையில், கீழக்கரையில் உள்ள பொதுமக்கள் சளி, இருமல் காய்ச்சல், தொண்டை வலி போன்ற தொந்தரவுகள் இருந்தால் அருகில் உள்ள மருத்துவரை உடனடியாக அணுகி கொரோனா பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
அறிகுறி
மேலும் இது குறித்து யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். அறிகுறி உள்ளவர்கள் ஆரம்பத் திலேயே மருத்துவரை அணுகினால் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று கூறினார். மேலும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அரசு விதித்த ஊரடங்கை மதித்து வீட்டில் இருக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

Next Story