பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்


பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 15 May 2021 9:25 PM IST (Updated: 15 May 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

தொண்டி, 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று பரவாமல் இருக்க காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி மளிகை கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்றை பற்றிய கவலையில்லாமல் கொரோனா பரவலை காற்றில் பறக்க விட்டு ஏராளமான பொதுமக்கள் சமூக இடை வெளியை கடைபிடிக்காமல் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக வந்து கூடினர். அப்போது நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்த காய்கறி வியாபாரிகளை போலீசார் எச்சரித்து அந்த பகுதியில் இருந்து அப்புறப் படுத்தினர். தொண்டி மார்க்கெட் பகுதியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் இந்த பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Next Story