தேனி அருகே விபத்தில் ராணுவ வீரர் பலி


தேனி அருகே விபத்தில் ராணுவ வீரர் பலி
x
தினத்தந்தி 15 May 2021 9:36 PM IST (Updated: 15 May 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலியானார்.

அல்லிநகரம்:
தேனியை அடுத்த டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 32). ராணுவ வீரர். இவர் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராமராஜ் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
அப்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்த சிவக்குமார் (38) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து கொண்டிருந்தார். இதில், எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ராமராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சிவக்குமார் படுகாயம் அடைந்தார். 
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் ராமராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story