லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடக்கம்


லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடக்கம்
x
தினத்தந்தி 15 May 2021 9:41 PM IST (Updated: 15 May 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

கூடலூர்:
கூடலூர் அருகே லோயர்கேம்பில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக லோயர்கேம்பில் 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் அணையில் இருந்து திறந்துவிட வேண்டும். வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அப்போது மின்உற்பத்தி நிறுத்தப்படும். 
இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மின்உற்பத்தி நிலையத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்தது. 
இதைத்தொடர்ந்து நேற்று முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் தலா 23 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு வருகிறது.

Next Story