ஒரே நாளில் பெண்கள் உள்பட 48 பேருக்கு கொரோனா
நீடாமங்கலம் வட்டாரத்தில் நேற்று ஒரே நாளில் பெண்கள் உள்பட 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வட்டாரத்தில் நேற்று ஒரே நாளில் பெண்கள் உள்பட 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
48 பேருக்கு கொேரானா
நீடாமங்கலம் வட்டாரத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. இதுவரை பாதிக்கப்பட்ட சிலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் நீடாமங்கலம் வட்டாரத்தில் நேற்று ஒரேநாளில் பெண்கள் உள்பட 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சுகாதார பணிகள்
தகவலறிந்த வட்டார மருத்துவ அலுவலர் ராணிமுத்துலெட்சுமி மற்றும் சுகாதாரஆய்வாளர்கள், சுகாதாரசெவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Related Tags :
Next Story