கச்சிராயப்பாளையம் பகுதியில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 60 வாகனங்கள் பறிமுதல்
கச்சிராயப்பாளையம் பகுதியில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 60 வாகனங்கள் பறிமுதல்
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் தேவையின்றி சுற்றித்திரிவதையும், அரசமரத்தடி மற்றும் சாலை ஓரங்களில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதையும் காண முடிந்தது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் தேவையின்றி சுற்றித்திரிபவர்கள், சாலையோரம் அமர்ந்து பேசுபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் கச்சிராயப்பாளையம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி சாலையில் சுற்றத்திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகளை எச்சரித்ததோடு 60 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் முக கவசம் அணியாத 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவர்களை எச்சரித்து அனுப்பினர். அதேபோல் வருவாய்த்துறை சார்பில் சின்ன சேலம் தாசில்தார் ராஜலட்சுமி தலைமையிலான வருவாய் துறையினர் கச்சிராயபாளையம் பகுதியில் தீவிர ரோந்து ஈடுபட்டு காலை 10 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளை மூடச்சொல்லி எச்சரித்தனர்.
Related Tags :
Next Story