ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்புப்பணி நேற்று நிறைவடைந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்புப்பணி நேற்று நிறைவடைந்தது.
தளி
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்புப்பணி நேற்று நிறைவடைந்தது.
வனவிலங்குகள் கணக்கெடுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகு பூனை, குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்ற.
இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 8 ம் தேதி பயிற்சியுடன் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் கோடைகால கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது. அந்த பணிகள் கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரையிலும் தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்றது.
இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் கூறியதாவது:-
தடயங்கள் குறித்து பதிவு
உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம் வந்தரவு வசனங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டது.
வனப்பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி முதல் 3 நாட்களில் (09.05.21 முதல் 11.05.21) சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.
தாவர வகைகள்
அடுத்த 3 நாட்களில் (12.05.21 முதல் 14.05.21) நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் இறை விலங்குகள், தாவரங்கள், மனித இடையூறுகள், குளம்பினங்களின் எச்சம் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. மேலும் அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் எனது தலைமையில் உடுமலை வனச்சரகம் மனுப்பட்டிபிரிவு ஏழுமலையான் கோவில் சரகப்பகுதியில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அப்போது காட்டெருமைகள், செந்நாய்கள், காட்டுயானைகள் நேரடியாக பார்க்கப்பட்டது.
மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அரசு அறிவித்திருந்த விதிமுறைகளை பின்பற்றி கணக்கெடுப்பு நடைபெற்றது. இவ்வாறு தெரிவித்தார்.
கணக்கெடுப்பு பணியில் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டைத்தடுப்புகாவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story