பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் தீ விபத்து
பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் தீ விபத்து
திருப்பூர்
திருப்பூர் கொங்கு நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பனியன் நிறுவன உரிமையாளர். இவருடைய வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் இருந்த ஏ.சி.யில் இருந்து நேற்று காலை 8.30 மணி அளவில் கரும்புகை அதிகமாக வெளியேறியது. செந்தில்குமாரின் குடும்பத்தினர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். மேலும் இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏ.சி., எல்.இ.டி. டி.வி., சோபா ஆகியவை எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால் மற்ற அறைக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் அங்கு சென்று பார்வையிட்டு விசாரித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story