கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 2 மின்மாற்றிகள் இட மாற்றம்


கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில்  போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 2 மின்மாற்றிகள் இட மாற்றம்
x
தினத்தந்தி 15 May 2021 10:34 PM IST (Updated: 15 May 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 2 மின்மாற்றிகள் இட மாற்றம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சிக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதுதவிர லாரி, டிராக்டர், கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் இருந்து சேலம், சென்னை, திருவண்ணாமலை, கச்சிராயப்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நான்கு முக்கிய சாலைகள் உள்ளன. இங்கு சாலையோரத்தில் 2 மின்மாற்றிகள் உள்ளன. இதனால் வாகனங்கள் ஒரு சாலையில் இருந்து இன்னொரு சாலைக்கு திரும்பி செல்வதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள 2 மின்மாற்றிகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 2 மின் மாற்றிகளையும் மின்சாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் அருகில் வேறு இடத்தில் மாற்றி வைத்தனர்.

Next Story