ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஏரல் ரேஷன் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
ஏரல், மே:
ஏரல் ரேஷன் கடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சியை, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏரல் தாசில்தார் இசக்கிராஜ், கூட்டுறவு கடன் சங்க செயலர் பாக்கியம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாயர்புரம் கூட்டுறவு பண்டகசாலையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பண்டகசாலை தலைவர் எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம் தலைமை தாங்கினார். சாயர்புரம் நகர தி.மு.க. செயலாளர் அறவாழி முன்னிலை வகித்தார். நிவாரண உதவி தொகையை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் சக்கரவர்த்தி, சாயர்புரம் நிர்வாக அதிகாரி மஞ்சுளா மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story