2 போலீசாருக்கு கொரோனா


2 போலீசாருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 May 2021 11:07 PM IST (Updated: 15 May 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

உலகம்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை சரகம் பகுதியில் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உலகம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 35 வயது மதிக்கத்தக்க போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதை தொடர்ந்து போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த மற்ற போலீசாருக்கும் எஸ்.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதே போல சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டை சரக போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் வாகன ஓட்டுனருக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறையினர் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story