கொட்டும் மழையிலும் தடுப்பூசி போட காத்திருந்த பொதுமக்கள்
கோவையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கொட்டும் மழையிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கோவை
கோவையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கொட்டும் மழையிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா 2-வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் தினந்தோறும் 2 ஆயித்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம், தடுப்பூசி போடும் சிறப்பு மையங்களில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
அதிக அளவிலான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பல இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கொட்டும் மழை
கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதலே மழை பெய்தது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
கொட்டும் மழையிலும் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடபட்டது.
மேலும் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. தற்போது கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு காரணமாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்பட்டது.
Related Tags :
Next Story