கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 20 பேர் பலி
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 20 பேர் பலியாகினர்.
கோவை
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 20 பேர் பலியாகினர். மேலும் 3,124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வேகமாக பரவும் கொரோனா
தமிழக அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகாதாரதுறை வெளியிட்டுள்ள பட்டியல்படி கோவையில் நேற்று ஒரே நாளில் 3,124 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 358 ஆக உயர்ந்துள்ளது.
கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 1,222 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 91 ஆயிரத்து 328 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 20 ஆயிரத்து 173 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
20 பேர் பலி
கோவையில் கொரோனா தொற்றுக்கு இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 6 பெண்கள், 14 ஆண்கள் என மொத்தம் 20 பேர் இறந்து உள்ளனர். இதனால் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 857 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை மாவட்டம் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 3,509 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், 684 அவசர சிகிச்சை படுக்கை வசதிகளும் உள்ளன.
இதில் தற்போது 29 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், 9 அவசர சிகிச்சை படுக்கைளும் மட்டுமே காலியாக உள்ளதாக சுகாதார துறை வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story