கொரோனா பாதித்த 130 பேர் குணம் அடைந்தனர்


கொரோனா பாதித்த 130 பேர் குணம் அடைந்தனர்
x
தினத்தந்தி 15 May 2021 11:19 PM IST (Updated: 15 May 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதித்த 130 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 249 பேருக்கு ெகாரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் என 1,420 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 130 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.



Next Story