கோவில்பட்டி அருகே சூறைக்காற்றுடன் மழை; 1000 வாழைகள் நாசம்
கோவில்பட்டி அருகே சூறைக்காற்றுடன் மழை பெய்ததில் 1000 வாழைகள் நாசமாயின.
கோவில்பட்டி, மே:
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முதல் பலத்த சூறைக்காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காற்று பலமாக வீசியதால் கோவில்பட்டி அருகே உள்ள தோணுகாலில் 2 ஏக்கரில் மாரிமுத்து என்ற விவசாயி பயிரிட்டு இருந்த வாழைகள் அனைத்து சரிந்து முற்றிலுமாக சேதமடைந்தது. சுமார் 1300 வாழைகள் பயிரிட்டு அனைத்து வாழைகளும் குலை தள்ளிய நிலையில் நேற்று வீசிய சூறைக்காற்றுக்கு சுமார் 1000 வாழைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதன் மதிப்பு 2 லட்ச ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு வேதனை தெரிவித்துள்ள விவசாயி மாரிமுத்து, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துதுள்ளார்.
Related Tags :
Next Story