4 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
கொரோனா நிவாரண நிதி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பயனாளிகளுக்கான ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
4 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற அன்றைய தினமே தலைைம செயலகத்தில் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன முத்தான 5 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார்.
அதில் ஒன்று கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்குதல். இத்திட்டம் ஜூன் மாதம் தான் ெதாடங்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இரண்டாம் கட்ட அலையில் பொதுமக்கள் அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாகி வருவதை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டு நிதியை ஒதுக்கி உள்ளார்.
தமிழகத்தில் ரூ.4,153.49 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி, இதன்மூலம் 2,07,66,950 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன்கடைகளில் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.80.57 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
Related Tags :
Next Story