ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிப்பு


ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 15 May 2021 11:56 PM IST (Updated: 15 May 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

தோகைமலை பகுதியில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தோகைமலை
அபராதம்
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும் தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றி சிக்கினால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று தோகைமலை கடைவீதி, மெயின்ரோடு பகுதிகளிலும் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் நின்று கொண்டு வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். இதைபோன்று தொடர்ந்து தேவையில்லாமல் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
நொய்யல்
வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், செந்தில்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் தவுட்டுப்பாளையம், பாலத்துறை மற்றும் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கை முன்னிட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கொரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்ட 144 தடை உத்தரவை மீறி தங்களது இரு சக்கர வாகனங்களில் கொரோனா தொற்றை பரப்பும் வகையில் சுற்றித் திரிந்ததாக கடம்பங்குறிச்சியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 52), செல்லப்பகவுண்டர் தெருவை சேர்ந்த முகமது அசாருதீன் (25), வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (48), பெரியகுளத்துப்பாளையத்தை சேர்ந்த பழனியப்பன் (56), கடவூர் அருகே சோறுதோன்றியனூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (26), மொச்சகொட்டாம் பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (42), நொய்யல் கொங்கு நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (47), குளித்தலையை சேர்ந்த கதிர்வேல் (36) மலைநகரைச் சேர்ந்த கணேஷ் (55) உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் 
கொரோனா ஊரடங்கையொட்டி கிருஷ்ணராயபுரம் தாலுகா முழுவதும் வருவாத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இதுவரை தாலுகா முழுவதும் ஊரடங்கை மீறியதாக 218 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.43 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகுடீஸ்வரன் தெரிவித்தார்.
குளித்தலை
குளித்தலை பகுதியில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது, ஊரடங்கை மீறி சிலர் தேவையின்றி சுற்றித்திரிந்தனர். இதையடுத்து ஊரடங்கை மீறியதாக குளித்தலை பகுதியை சேர்ந்த ரகுபாலன் (19), நவீன்குமார் (27), தர்மராஜ் (38), முருகேசன் (51), செல்லத்துரை (45), பிரகாஷ் (40), அய்யப்பன் (23), மருதை (21), சந்தோஷ்குமார் (24), தேவராஜ் (24) ஆகிய 10 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story