கரூர் கடைவீதிகளில் டீக்கடைகள் மூடல்


கரூர் கடைவீதிகளில் டீக்கடைகள் மூடல்
x
தினத்தந்தி 15 May 2021 11:57 PM IST (Updated: 15 May 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

கரூர் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. டீக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.

கரூர்
டீக்கடைகள் மூடல்
கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து கரூர் நகரின் முக்கிய பகுதியான கோவைரோடு, செங்குந்தபுரம், வையாபுரிநகர், வெங்கமேடு, பசுபதிபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து டீக்கடைகளும் நேற்று மூடப்பட்டிருந்தது.
 மேலும் கடைவீதிகளில் காய்கறி கடைகள், பலச்சரக்கு கடைகள் மட்டும் நேற்று காலை 10 வரை திறந்து இருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். 
கூட்டம் அலைமோதல்
இதனால் நேற்று காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை கரூர் நகரில் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியுடன் நின்று பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். 
 சில இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் கூட்ட நெரிசலில் பொருட்களை வாங்கி சென்றதை காணமுடிந்தது. பகல் நேரத்தில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story