கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா: இளம்பெண் உள்பட மேலும் 2 பேர் பலி ஒரே நாளில் 680 பேர் பாதிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா: இளம்பெண் உள்பட மேலும் 2 பேர் பலி ஒரே நாளில் 680 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 16 May 2021 12:00 AM IST (Updated: 16 May 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா: இளம்பெண் உள்பட மேலும் 2 பேர் பலி ஒரே நாளில் 680 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இளம்பெண் உள்பட மேலும் 2 பேர் பலியான நிலையில், ஒரே நாளில் 680 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 பேர் பலி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 48 வயது ஆண். உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 30-ந் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கடந்த 14-ந் தேதி இறந்தார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். கொரோனா பாதிப்பு காரணமாக இவர் கடந்த 7-ந் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
680 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 680 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 246 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 22 ஆயிரத்து 245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 ஆயிரத்து 127 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 960 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story