ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கனஅடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 May 2021 12:00 AM IST (Updated: 16 May 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 
அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 400 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்தது.
வெறிச்சோடிய ஒகேனக்கல்
இந்த நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்படுகிறது.
=======

Next Story