300 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது; கார் பறிமுதல்
300 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது; கார் பறிமுதல்
மேலூர்
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நோக்கத்துடன் பலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். மேலூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ரகுபதிராஜா மற்றும் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் பதுக்கல்காரர்களை அவர்களை தேடிப்பிடித்து கைது செய்து வருகின்றனர். இந்்தநிலையில் எம்.மலம்பட்டியில் நாகராஜன்(வயது 55) என்பவர் விற்பனைக்காக காரின் உள்ளே வைத்திருந்த 300 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்தனர். மேலும் காரையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story