கொரோனாவுக்கு மேலும் ஒரு போலீஸ்காரர் சாவு


கொரோனாவுக்கு மேலும் ஒரு போலீஸ்காரர் சாவு
x
தினத்தந்தி 16 May 2021 12:01 AM IST (Updated: 16 May 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஒரே நாளில் 38 போலீசாருக்கு வைரஸ் தொற்று கொரோனாவுக்கு மேலும் ஒரு போலீஸ்காரர் சாவு

பெங்களூரு:

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக போலீசாரும் அதிகஅளவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பெங்களூருவில் நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று காலை வரை 38 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதன்மூலம் பெங்களூருவில் கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,418 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் கொரோனாவுக்கு நேற்று ஒரு போலீஸ்காரர் உயிர் இழந்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த போலீஸ்காரர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதன்மூலம் பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியான போலீசாரின் எண்ணி்ககை 13 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 655 போலீசார் குணமடைந்துள்ளனர். 25 போலீசார் ஆஸ்பத்திரியிலும், 725 போலீசார் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 24 போலீசார் நேற்று குணமடைந்திருப்பதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story