நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு; 455 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து, 455 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 455 காசுகளாக உயர்ந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-480, ஐதராபாத்-448, விஜயவாடா-471, மைசூரு-475, மும்பை-506, பெங்களூரு-475, கொல்கத்தா-540, டெல்லி-518.
கறிக்கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.9 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.76 ஆக சரிவடைந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story