கரூர் மாவட்டம் முழுவதும் மதுவை பதுக்கி வைத்து விற்ற 10 பேர் கைது
கரூர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி மதுவை பதுக்கி வைத்து விற்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
10 பேர் கைது
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்களை பதுக்கி அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்படி நேற்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் ஜெயக்குமார் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், கரூர் மாவட்டத்தில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் அவர்களிடமிருந்து மொத்தம் 1,998 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
எச்சரிக்கை
இதில், வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், கரூர் அருகம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 41) என்பவர் வீட்டில் மட்டும் அவர் பதுக்கி வைத்திருந்த 1,714 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story