கொரோனா பாதித்த 105 பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளது


கொரோனா பாதித்த 105 பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 16 May 2021 12:39 AM IST (Updated: 16 May 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதித்த 105 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:
பெரம்பலூர்- அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் பெரம்பலூர் நகராட்சியில் 41 பகுதிகளும், பேரூராட்சிகளில் 4 பகுதிகளிலும், கிராமப்புறங்களில் 20 பகுதிகளிலும் என மொத்தம் 65 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் மொத்தம் 12 பகுதிகளிலும், உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு பகுதியும், கிராமப்புறங்களில் 27 பகுதிகளிலும் என மொத்தம் 40 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story