கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடக்கம்


கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 16 May 2021 12:40 AM IST (Updated: 16 May 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் அரியலூர் நகரில் உள்ள 6 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நேற்று ஒரு கடைக்கு 200 ரேஷன் அட்டைதாரர்கள் வீதம் 1,200 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.24 லட்சம் வழங்கப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கு முன்பும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி வந்த ரேஷன் அட்டைதாரர்களை சமூக இடைவெளியுடன் நிற்கச்செய்து, கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடித்து நின்று ரூ.2 ஆயிரத்தை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுச்சென்றனர்.

Next Story