கர்நாடகத்தில் புதிதாக 41,664 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 41,664 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 May 2021 12:48 AM IST (Updated: 16 May 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 41,664 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 349 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் புதிதாக 41,664 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 349 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மீண்டவர்கள் எண்ணிக்கை

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 18 ஆயிரத்து 345 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 41 ஆயிரத்து 664 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 71 ஆயிரத்து 931 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 349 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 434 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 34 ஆயிரத்து 425 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து 15 லட்சத்து 44 ஆயிரத்து 982 பேர் மீண்டுள்ளனர்..
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 5 ஆயிரத்து 494 ஆக உயர்ந்துள்ளது. 

கொப்பலில் 630 பேர்

பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 13 ஆயிரத்து 402 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 584 பேர், பல்லாரியில் 1,622 பேர், பெலகாவியில் 1,502 பேர், பெங்களூரு புறநகரில் 1,265 பேர், பீதரில் 185 பேர், சாம்ராஜ்நகரில் 535 பேர், சிக்பள்ளாப்பூரில் 595 பேர், சிக்கமகளூருவில் 1,093 பேர், சித்ரதுர்காவில் 454 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தட்சிண கன்னடாவில் 1,787 பேர், தாவணகெரேயில் 292 பேர், தார்வாரில் 901 பேர், கதக்கில் 459 பேர், ஹாசனில் 2 ஆயிரத்து 443 பேர், ஹாவேரியில் 267 பேர், கலபுரகியில் 832 பேர், குடகில் 483 பேர், கோலாரில் 778 பேர் கொரோனாவுக்கு பாதித்துள்ளனர்.

கொப்பலில் 630 பேர், மண்டியாவில் 1,188 பேர், மைசூருவில் 2,498 பேர், ராய்ச்சூரில் 467 பேர், ராமநகரில் 524 பேர், சிவமொக்காவில் 1,081 பேர், துமகூருவில் 2,302 பேர், உடுப்பியில் 1,146 பேர்,
உத்தரகன்னடாவில் 1,226 பேர், விஜயாப்புராவில் 789 பேர், யாதகிரியில் 343 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்பு
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 94 பேரும், பல்லாரியில் 28 பேரும், பீதரில் 6 பேரும், சாம்ராஜ்நகரில் 8 பேரும், சிக்பள்ளாப்பூரில் 5 பேரும், சிக்கமகளூருவில் 3 பேரும், சித்ரதுர்காவில் 4 பேரும், தட்சிண கன்னடாவில் 3 பேரும் உயிரிழந்து விட்டனர். 
தார்வாரில் 8 பேரும், கதக்கில் 4 பேரும், ஹாசனில்11 பேரும், ஹாவேரியில் 6 பேரும், கலபுரகியில் 21 பேரும், குடகில் 4 பேரும், கோலாரில் 5 பேரும், கொப்பலில் 10 பேரும், மண்டியாவில் 10 பேரும், மைசூருவில் 15 பேரும், ராய்ச்சூரில் 4 பேரும், ராமநகரில் 6 பேரும், சிவமொக்காவில் 15 பேரும், துமகூருவில் 18 பேரும் இறந்துள்ளனர்.

உடுப்பியில் 7 பேரும், உத்தரகன்னடாவில் 4 பேரும், விஜயாப்புராவில் 9 பேரும், யாதகிரியில் 8 பேரும் என இவர்கள் உள்பட மொத்தம் 349 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாதிப்பு அதிகரிப்பு

கர்நாடகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது 40 ஆயிரத்தை மையப்படுத்தியே உள்ளது. அதே நேரத்தில் தலைநகர் பெங்களூருவில் வைரஸ் பரவல் மற்றும் உயிரிழப்பு என்பது தொடர்ந்து கணிசமான அளவுக்கு குறைந்து வருகிறது.
 இங்கு நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 316 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று அது சற்று குறைந்து 13 ஆயிரத்து 402 ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

Next Story