ஊரடங்கை மீறியதாக 224 பேர் மீது வழக்கு


ஊரடங்கை மீறியதாக 224 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 May 2021 12:58 AM IST (Updated: 16 May 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை மீறியதாக 224 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

மதுரை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு 24-ந் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி நண்பகல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் பஸ் போக்குவரத்தும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல் முழு ஊரடங்கு நாட்களில் தேவை இன்றி சுற்றித்திரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 224 நபர்கள் சரிவர முக கவசம் அணியாமல் சென்றதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களை போலீசார் எச்சரித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடாதவாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

Next Story