கொரோனா கட்டுப்பாட்டு அறையை சிறப்பு போலீஸ் அதிகாரி ஆய்வு
கொரோனா கட்டுப்பாட்டு அறையை சிறப்பு போலீஸ் அதிகாரி ஆய்வு செய்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கிற்காக அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகள் மற்றும் சோதனை மையங்களை தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு போலீஸ் அதிகாரியும், தமிழக கூடுதல் டி.ஜி.பி.யுமான (தொழில்நுட்ப சேவை) அமரேஷ் பூஜாரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட போலீசாரின் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரடங்கு செயல்பாட்டு முறை ஆகியவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, கொரோனா பரவலை தடுக்க மேலும் பல அறிவுரைகளை வழங்கினார்.
Related Tags :
Next Story