நெல்லையில் ரெம்டெசிவிர் மருந்து கடத்தியவரின் வங்கி கணக்கு முடக்கம்
நெல்லையில் ரெம்டெசிவிர் மருந்து கடத்தியவரின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிக விலைக்கு விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து கோவில்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மருந்து வியாபாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி பெருமாள்புரத்தை சேர்ந்த பிரவீன் (வயது 37), மேலப்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கிய மைக்கேல் (40) மற்றும் கே.டி.சி. நகரை சேர்ந்த சண்முகராஜ் (30) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 4 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த நிலையில் மருந்து விற்பனை தொடர்பாக நடைபெற்ற பண பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்த பிரவீன் வங்கி கணக்கை போலீசார் முடக்கி உள்ளனர்.
Related Tags :
Next Story