நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு 215 படுக்கைகள் தயார்
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு 215 படுக்கைகள் தயாராக உள்ளது.
நெல்லை:
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 215 படுக்கை வசதிகளுடன் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் தனித்தனி அறைகளில் கொரோனா தொற்றாளர்களை தங்க வைக்கும் வசதிகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு தங்க வைக்கப்படும் நோயாளிகளுக்கு சத்தான உணவு, சுத்தமான குடிநீர், சித்த மருந்துகள் வழங்கப்படுவதோடு, டாக்டர்கள், செவிலியர்களால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த மையத்தை கலெக்டர் விஷ்ணு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அரசு ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களுக்கு தேவைப்படும் கட்டில்கள், மெத்தைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டும், நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டும் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட கிளப் கட்டிடத்தில் இருப்பு வைக்கப்பட்டு, தேவைப்படும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கும், கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அங்கும் கலெக்டர் விஷ்ணு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கிருந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு பிரித்து அனுப்பி வைத்தார்.
Related Tags :
Next Story