கொரோனா ஊரடங்கை மீறி அவசியம் இன்றி வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம்


கொரோனா ஊரடங்கை மீறி அவசியம் இன்றி வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 16 May 2021 3:49 AM IST (Updated: 16 May 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நேற்று முன்தினம் முதல் தேவை இன்றி சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை போலீசார் தொடங்கினார்கள்.

ஈரோட்டில் நேற்று முன்தினம் முதல் தேவை இன்றி சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை போலீசார் தொடங்கினார்கள். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை உத்தரவின்பேரில் நேற்று காலையில் இருந்தே ஈரோட்டில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் நேற்றுக்காலை 100-க்கும் மேற்பட்டவர்கள் அவசியம் இன்றி சாலைகளில் வாகனங்களில் சுற்றியதற்காக பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டனர்.

Next Story