தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் போன் ஒட்டு கேட்பு குறித்து விசாரணை; நானா படோலே வலியுறுத்தல்


தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் போன் ஒட்டு கேட்பு குறித்து விசாரணை; நானா படோலே வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 May 2021 4:50 PM IST (Updated: 16 May 2021 4:50 PM IST)
t-max-icont-min-icon

தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் போன் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.

விசாரணை

காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போன் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கடந்த தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியின் போது 2016-17-ம் ஆண்டுகளில் நடந்ததாக கூறப்படும் போன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அனுமதி யார் கொடுத்தது?

போதை பொருள் கடத்தலை கண்டுபிடிப்பதாக கூறி அரசியல் தலைவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. அம்ஜத் கான் என்பவருக்கு சொந்தமான போன் நம்பர் என கூறி எனது போனையும் ஒட்டுகேட்டு உள்ளனர். போதைப்பொருள் கும்பலுடன் எனது எண்ணை தொடர்புபடுத்தியது கண்டனத்திற்கு உரியது. யார், எதற்காக இதற்கு அனுமதி கொடுத்தனர். ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் நுழைவது குற்றம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story