கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு: கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து கள்ளக்காதலனும் தற்கொலை செய்துகொண்டார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 38). இவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கன்னியம்மாளுக்கும் தட்டான் மலை தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் (45) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. சுரேசுக்கு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரம் கணவர் கோபிக்கு தெரியவரவே மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் சுரேசுடனான பழக்கத்தை நிறுத்த சொல்லி உள்ளார். இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றுமுன்தினம் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கோபி, சுரேஷ் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டுக்கு வந்த கோபி மனைவி கன்னியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டார்.
தற்கொலை
நேற்று காலை கோபி, கன்னியம்மாள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தனர். இதை அறிந்த போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனை அறிந்த சுரேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story