வேலூர் மாவட்டத்தில் 643 பேருக்கு கொரோனா பாதிப்பு


வேலூர் மாவட்டத்தில் 643 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 16 May 2021 6:01 PM IST (Updated: 16 May 2021 6:01 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 643 பேருக்கு கொரோனா பாதிப்பு

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 753 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்றைய பரிசோதனையின் முடிவில் மேலும் 643 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 300-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. 

அதேபோன்று வேலூரில் தங்கி சிகிச்சை பெறும் பிறமாநிலங்களை சேர்ந்த சுமார் 30 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. கிராமப்புற பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 643 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவினால் 34 ஆயிரத்து 794 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 ஆயிரத்து 587 பேர் குணமடைந்துள்ளனர். 473 பேர் உயிரிழந்தனர். 3,734 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story