முழு ஊரடங்கின் போது திறந்திருந்த 17 கடைகளுக்கு சீல்
முழு ஊரடங்கின் போது திறந்திருந்த 17 கடைகளுக்கு சீல்
ஆரணி
ஆரணியில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஆரணியில் பிரதான சாலையான காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, மண்டிவீதி, பெரியகடைவீதி, அருணகிரி சத்திரம், பழைய, புதிய, பஸ் நிலையங்கள், சைதாப்பேட்டை, சேவூர் பைபாஸ் ரோடு, வி.ஏ.கே.நகர் ஆகிய பகுதிகளில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு அவர்களிடம் வாகனங்களை ஒப்படைத்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல், நகராட்சி அலுவலர் குமார், ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறந்திருந்த 17 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதையறிந்த வியாபாரிகள் பலர் தங்களின் கடைகளை தானாக முன்வந்து மூடினர்.
Related Tags :
Next Story