உடன்குடி தேரியூரில் மது பாட்டில்கள் வைத்திருந்தவர் கைது
உடன்குடி தேரியூரில் மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது உடன்குடி தேரியூர் பஸ் ஸ்டாப் தென் பக்கம் உள்ள உடங்காட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனை நடத்தினர் அப்போது அவர் தமிழக அரசின் தடை உத்தரவை மீறி எவ்வித அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்யும் நோக்கத்தில் மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் உடன்குடி பிள்ளையார் பெரியவன்தட்டை சேர்ந்த ராமலிங்கம் (45) என்பவர் என்றும் தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story